உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / தொழிலாளர் குழந்தைகள் கல்வி ஊக்க தொகை பெறலாம்

தொழிலாளர் குழந்தைகள் கல்வி ஊக்க தொகை பெறலாம்

திருவள்ளூர்:தொழிலாளர் நல நிதி செலுத்துவோரின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்க தொகை பெற விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர்-அமலாக்கம் ஷோபனா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:தமிழக தொழிலாளர் நல நிதி சட்டத்தின்படி தொழிற்சாலை, கடை, மோட்டார் போக்குவரத்து, உணவு நிறுவனம் மற்றும் தோட்ட நிறுவனங்கள் போன்ற அமைப்பு சார்ந்த நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தொழிலாளர் பங்கு 20 ரூபாய் மற்றும் நிறுவனத்தின் பங்கு 40 ரூபாய் என 60 ரூபாய் தொழிலாளர் நல நிதி தொகையினை வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.இனிவரும் காலங்களில் நிறுவனங்கள் காசோலை, வரைவோலை வாயிலாக தொகை செலுத்துவதை தவிர்த்து www.lwmis. lwb.tn.gov.in என்ற இணையதளம் வழியாக செலுத்த வேண்டும்.மேலும், தொழிலாளர் நல நிதி செலுத்தும் தொழிலாளர் மற்றும் அவரைச் சார்ந்தவர்களுக்கு வாரியத்தின் மூலம் பல்வேறு நல திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் கல்வி உதவி தொகை 1000-12,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு தொழிலாளர் நல வாரிய அலுவலகத்தில் நேரிலோ அல்லது www. lwb.tn.gov.in என்ற இணைய தளத்திலோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் செயலளர், தமிழ்நாடு தொழிலாளர் நல வாரியம், சென்னை-6 என்ற முகவரிக்கு டிச.31க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ