மேலும் செய்திகள்
ஊட்டச்சத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி
05-Mar-2025
திருவள்ளூர் : திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில், உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது.திருவள்ளூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று உலக காசநோய் தினம் அனுசரிக்கப்பட்டது. இதில், கலெக்டர் பிரதாப் தலைமை வகித்து பேசியதாவது:.திருவள்ளூர் மாவட்டத்தில், 'காசநோய் இல்லா தமிழகம் - 2025' என்ற இலக்கை நோக்கி பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நடமாடும் காசநோய் கண்டுபிடிப்பு வாகனம் வாயிலாக, நம் மாவட்டத்தில் 35,885 பேருக்கு, 'டிஜிட்டல் எக்ஸ்ரே' பரிசோதனை நடத்தியதில், 141 காச நோயாளிகள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.மாவட்டத்தில் மொத்தம், 16 நவீன கருவி வாயிலாக, மருத்துவமனைகளில் காசநோய் கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. சிகிச்சையின் போது அரசு வழங்கும் ஊட்டச்சத்திற்கான தொகை 1,000 ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது. பொருளாதாரத்தில் மிகவும் நலிவுற்ற மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள, 3,114 பேருக்குஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
05-Mar-2025