தீபாவளிக்கு பட்டாசு கடை அமைக்க விண்ணப்பிக்கலாம்
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், தீபாவளி பண்டிகைக்கு தற்காலிக பட்டாசு கடை அமைக்க இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நாடு முழுதும், வரும் அக்., 20ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, திருவள்ளூர் மாவட்டத்தில், தற்காலிக பட்டாசு கடை அமைக்க விரும்புவோர், https://www.inesevai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் உரிய ஆவணங்களுடன், வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் ஆவடி காவல் ஆணையரிடத்திலும் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் ஏற்கப்பட்டு, உத்தரவு வழங்கப்பட்ட விபரம் மற்றும் நிராகரிக்கப்பட்ட விபரத்தை, இணையதளம் வாயிலாகவே தெரிந்து கொள்ளலாம். உரிய உரிமம் பெறாமல் பட்டாசு விற்பனை செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.