உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / ரேஷன் பொருளை விட்டு கொடுக்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்

ரேஷன் பொருளை விட்டு கொடுக்க இணையதளத்தில் பதிவு செய்யலாம்

திருவள்ளூர்:ரேஷன் பொருள் வாங்க விருப்பமில்லாதவர்கள், அதை இணையதளத்தில் பதிவு செய்து, விட்டு கொடுக்கலாம் என, கலெக்டர் பிரதாப் கேட்டு கொண்டுள்ளார். திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டை, சர்க்கரை விருப்பம், அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் பொருளில்லா அட்டை என, ஐந்து வகையான ரேஷன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. குடும்பங்களின் பொருளாதார நிலையை பொறுத்து தான், அட்டை வகை தீர்மானிக்கப்படுகிறது. இவற்றில் பொருளில்லா அட்டை வைத்திருப்போர், ரேஷன் கடைகளில் எந்த பொருளையும் வாங்க முடியாது. மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் இயங்கி வரும் அனைத்து ரேஷன் கடைகளிலும், அத்தியாவசிய பொருட்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள், அவற்றை பெற விருப்பமில்லை எனில் விட்டு கொடுக்கலாம். இதற்கு, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறையின் www.tnpds.gov.inஎன்ற இணையதளம் மூலமாக, தங்கள் குடும்ப அட்டையை, பொருளில்லா குடும்ப அட்டையாக மாற்றி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை