உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற வாலிபர் கைது

சிறுமியை திருமணம் செய்ய கடத்தி சென்ற வாலிபர் கைது

திருத்தணி:சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி, திருமணம் செய்ய வெளியூருக்கு கடத்தி சென்ற வாலிபர், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.திருத்தணி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி பிளஸ் 2 படித்து வருகிறார். மேல்திருத்தணி அமிர்தாபுரத்தைச் சேர்ந்த பிரவீன், 21, என்ற வாலிபர், மாணவியை காதலிப்பதாக ஆசைவார்த்தைகள் கூறி, கடந்த மாதம் திருமணம் செய்வதாக வெளியூருக்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.இதுகுறித்து மாணவியின் பெற்றோர், திருத்தணி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்படி, விசாரித்து வந்த போலீசார், சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். பிரவீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து, நேற்று சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை