மேலும் செய்திகள்
சாலை வசதி கேட்டு ஒண்டிக்குப்பத்தில் போராட்டம்
12-Nov-2024
ஆட்டோ - கார் மோதல் நான்குபேர் காயம்
13-Nov-2024
மணவாளநகர்:திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட எஸ்.பி., க்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்.பி., சீனிவாசபெருமாள் உத்தரவின்படி மணவாளநகர் காவல் உதவி ஆய்வாளர் கர்ணன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் மணவாளநகர், ஒண்டிக்குப்பம், வெங்கத்துார் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். மணவாளநகர் பேருந்து நிறுத்தம் அருகே போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றவரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் மணவாளநகர் கபிலர் நகர் அழகிரி தெருவைச் சேர்ந்த கவுதம், 32, என்பது தெரிந்தது. அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு 2,000 ரூபாய். மணவாளநகர் போலீசார் கவுதமை கைது செய்து திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.
12-Nov-2024
13-Nov-2024