பைக் - லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு
திருவள்ளூர்:திருவள்ளூர் அருகே பைக் மீது லாரி மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார். திருவள்ளூர் அடுத்த பெரியமஞ்சங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ராமன் மகன் ஜெயபால், 26. இவர், நேற்று முன்தினம் இரவு, பட்டரைப்பெரும்புதுாரில் இருந்து மஞ்சங்குப்பம் நோக்கி 'பல்சர்' பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பட்டரைப்பெரும்புதூர் பாலம் அருகே, திருவள்ளூர் நோக்கி வந்த 'அசோக் லைலண்ட்' லாரி மோதியது. இதில், சம்பவ இடத்திலேயே ஜெயபால் உயிரிழந்தார். தகவல் அறிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, நேற்று ராமன் அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், லாரியை பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.