உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப பலி

மறுவாழ்வு மையத்தில் வாலிபர் பரிதாப பலி

ஊத்துக்கோட்டை:போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். புதுக்கோட்டை மாவட்டம், கரம்பன்காடு பகுதியைச் சேர்ந்தவர் நைனாமுகமது. இவரது மகன் ரியான் அகமது, 29. குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், அடிக்கடி சிகிச்சை பெற்று வந்தார். சிறிது காலம் குடிப்பழக்கத்தை நிறுத்தியவர், மீண்டும் குடிக்கு அடிமையானார். இதனால், பெரியபாளையம் அடுத்த வடமதுரை போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. சிகிச்சைக்காக, பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து, பெரியபாளையம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி