தங்கை கணவரை கொன்றவர் கைது
திருவாரூர்; தங்கை கணவர் தலையில் கல்லை போட்டு கொன்ற நபர் கைது செய்யப்பட்டார்.திருவாரூர் மாவட்டம், மாயனுாரைச் சேர்ந்தவர் சோமசுந்தரம், 33; கூலி தொழிலாளி. இவருக்கும், அதே ஊரை சேர்ந்த முருகேசன் மகள் சுபலட்சுமி, 25, என்பவருக்கும் இரு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு காரணமாக, இருவரும் எட்டு மாதங்களுக்கு முன் பிரிந்தனர். இது தொடர்பாக, இரு குடும்பங்களுக்கும் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, வடபாதிமங்கலம் கடைத்தெருவில், சுபலட்சுமி சகோதரர் சிவநேசன், 28, அவரது நண்பர்கள் மூவர் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது, அவ்வழியாக சோமசுந்தரம் சென்றார். சிவநேசன் அவரிடம் விவாகரத்து தொடர்பாக பேச்சு கொடுத்தார். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. சிவநேசன் தன் நண்பர்களுடன் சேர்ந்து, சோமசுந்தரத்தை தாக்கி, அவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்தார். வடபாதிமங்கலம் போலீசார், சிவநேசனை கைது செய்து மற்றவர்களை தேடுகின்றனர்.