கர்ப்பமாக்கிய சிறுவன் கைது
திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியை சேர்ந்த ராஜ் மகன் மணிகண்டன், 17, ஈரோடு தனியார் நிறுவன தொழிலாளி. இவரது உறவினர், 17 வயது சிறுமி. மணிகண்டன், அந்த சிறுமிக்கு மாமன் மகன் என்பதால், அவரது வீட்டிற்கு அடிக்கடி வந்தவர், சிறுமியிடம் திருமணம் செய்வதாக கூறி, ஆசை வார்த்தை தவறாக நடந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த சிறுமி, எட்டு மாதம் கர்ப்பமாக உள்ளார்.சிறுமியின் பெற்றோர் புகாரின்படி, மன்னார்குடி போலீசார், மணிகண்டன் மீது, நேற்று முன்தினம் போக்சோவில் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.