உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / அரசு பஸ் டிரைவருக்கு வலிப்பு காயத்துடன் தப்பிய பயணியர்

அரசு பஸ் டிரைவருக்கு வலிப்பு காயத்துடன் தப்பிய பயணியர்

திருப்பனந்தாள்:தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் இருந்து நேற்று மாலை 3:00 மணிக்கு, விருதாச்சலம் நோக்கி சென்ற பஸ்சை டிரைவர் நடராஜன் ஓட்டினார். திருப்பனந்தாளில் பயணியரை ஏற்றி, அணைக்கரைக்கு பஸ் சென்றது. பஸ்சில் 25க்கும் மேற்பட்ட பயணியர் இருந்தனர். டிரைவர் நடராஜனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. இதனால், நிலைகுலைந்த டிரைவர் பஸ்சை நிறுத்த முயன்றார். ஆனால் பஸ்சை அவரால் இயக்க முடியாமல் தடுமாறினார். இருப்பினும் சாதுர்யமாக சாலையின் வலது பக்கம் இருந்த ஜல்லி மேட்டில் பஸ்சை ஏற்றி நிறுத்தினார். இந்த விபத்தில், டிரைவர் நடராஜனுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது.மேலும், பயணியர் பத்து பேருக்கும் காயம் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி