தடுப்பு சுவரில் கார் மோதி வாலிபர் உயிரிழப்பு
திருவாரூர்: சாலை தடுப்பு சுவரில் கார் மோதி, வாலிபர் உயிரிழந்தார். திருவாரூரை சேர்ந்த அப்துல் வகாப் மகன் முகமது ரபிக், 28. திருமணம் ஆகி ஐந்து மாதம் ஆன நிலையில், அவரது மனைவி, புதுக்கோட்டை மாவட்டம், அம்மாபட்டினத்தில் உள்ளார். நேற்று முன்தினம் இரவு, அம்மாபட்டினம் சென்று மனைவியை பார்த்துவிட்டு, திருவாரூர் நோக்கி கார் ஓட்டி வந்தார். திருத்துறைப்பூண்டி - நாகப்பட்டினம் பைபாஸ் சாலையில், வேளூரில் வரும்போது, நள்ளிரவு, 2:15 மணிக்கு, திடீரென காரை திருப்பி, வந்த வழியில் செல்ல முயன்றுள்ளார். அப்போது, கார் நிலை தடுமாறி சாலையோர தடுப்பு சுவரில் மோதி தீப்பிடித்தது. காரில் சிக்கிய அவர், தீயில் கருகி, அதே இடத்தில் இறந்தார். திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.