உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் /  திருமக்கோட்டை எரிவாயு மின் நிலைய மாற்றம் நிறுத்திவைப்பு

 திருமக்கோட்டை எரிவாயு மின் நிலைய மாற்றம் நிறுத்திவைப்பு

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டை எரிவாயு மின் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றும் முடிவை மின் வாரியம் கைவிட்டது. திருவாரூர் மாவட்டம், திருமக்கோட்டையில் மின் வாரியத்திற்கு, 107 மெகா வாட் திறனில், திருமக்கோட்டை எரிவாயு மின் நிலையம் உள்ளது. அங்கு, குறைவாகவே எரிவாயு கிடைத்ததால், 2023 முதல் மின் உற்பத்தி முடங்கியுள்ளது. சென்னை அடுத்த எண்ணுாரில், இந்தியன் ஆயில் நிறுவனத்திற்கு, வெளிநாடுகளில் இருந்து கப்பலில் எரிவாயு எடுத்து வரப்பட்டு, வீடுகள், ஆலைகளுக்கு, தனித்தனி இயற்கை எரிவாயுவாக வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில், சென்னை பேசின்பிரிட்ஜ், எண்ணுாரில் மின் வாரியத்திற்கு சொந்தமான காலியிடத்தில், திருமக்கோட்டை எரிவாயு மின் நிலையத்தை மூடிவிட்டு, அங்குள்ள உபகரணங்களை பிரித்து எடுத்து, எண்ணுார் அல்லது வேறு இடத்தில் அதை நிறுவி, இந்தியன் ஆயிலின் திரவநிலை இயற்கை எரிவாயுவை பயன்படுத்தும் வகையில், புதிய மின் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஆனால், மின் நிலையத்தை இடமாற்றினால் அதிக செலவாகும் என தெரியவந்தது. மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'திருமக்கோட்டை மின் நிலையத்தை வேறு இடத்திற்கு மாற்றம் செய்வதற்கு பதில், அங்கு குழாய் வழித்தடத்தில் இயற்கை எரிவாயுவை எடுத்து வந்து, மின் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்கு அரசிடம் ஒப்புதல் பெற்றதும், அதற்கான பணிகள் மேற்கொள்ளப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை