மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகி செயலால் பரபரப்பு
26-Dec-2025
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
துாத்துக்குடி:தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் அதிகரித்து வருவதாக பல்வேறு அரசியல் கட்சியினர் புகார் தெரிவித்தனர். ரேஷன் அரிசி கடத்தலின் பிரதான பகுதியாக துாத்துக்குடி மாவட்டம் இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.அதை உறுதி செய்யும் வகையில், ரேஷன் அரிசி கடத்தல் பின்னணியில், கோவில்பட்டியில் வழக்கறிஞர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் அரங்கேறியது. இதுதொடர்பாக, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஐந்து பேர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த சம்பவத்துக்கு பிறகு துாத்துக்குடி மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தல் சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கூட்டுறவுத் துறை கமிஷனர் நேரடியாக கண்காணித்து வருகிறார். குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாரும் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்துள்ளனர்.இதுதொடர்பாக, குடிமைப் பொருள் குற்றப்புலனாய்வு பிரிவு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:துாத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஐந்து மாதங்களில், 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது, 71 வழக்குகளில் 40 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. எட்டு வழக்குகளில் 39 கியாஸ் சிலிண்டர்களும், ஒரு வழக்கில் 6000 லிட்டர்கலப்பட டீசல், 40 கிலோ கோதுமை ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.இதுவரை 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நான்கு பேர் தாசில்தார் முன் ஆஜர் செய்யப்பட்டு, நன்னடத்தைச் சான்று பெறப்பட்டுள்ளது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட பாலமணிகண்டன் என்பவர் கள்ளச்சந்தைகாரர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கோவில்பட்டி தாலுகாவில் இதுவரை 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 10 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 14 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு, 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
26-Dec-2025
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025