மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்தவர் யோவான் ராஜ், 33. இவருக்கு சுதாசெல்வி என்ற மனைவியும், இரண்டு குழந்தைகளும் உள்ளன. யோவான் ராஜ் திருச்செந்துாரில் உள்ள தனியார் விடுதியில் வேலை பார்த்து வருகிறார். வீட்டு முன் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.துாத்துக்குடியில் இருந்து சுதா செல்வியின் உறவினர்கள் ஈஸ்வரி, ராணி மற்றும் இரண்டு குழந்தைகள் வீட்டுக்கு வந்துள்ளனர். யோவான் ராஜ் இரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுவிட்டார். வீட்டில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மட்டும் இருந்துள்ளனர்.அதை அறிந்த மர்ம நபர்கள் சிலர் நேற்று முன் தினம் அதிகாலை 2:30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து, முகமூடி அணிந்திருந்த மூன்று பேர் ஆயுதங்களுடன் உள்ளே நுழைந்தனர். பெண்கள், குழந்தைகளின் கழுத்தில் அரிவாளை வைத்து மிரட்டி தாலிச் சங்கிலி, பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள், 59,000 ரூபாய் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர். வீட்டில் இருந்த 3 மொபைல் போன்களையும் எடுத்துச் சென்றனர்.இதனால், நகையை பறிகொடுத்த பெண்கள் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்தனர். பின், ஸ்கூட்டரில் சுதா செல்வி திருச்செந்துார் சென்று யோவான் ராஜியிடம் நடந்த சம்பவத்தைக் கூறினார். வீட்டிலிருந்த ஈஸ்வரி, ராணி, நான்கு குழந்தைகள் வீரபாண்டியன்பட்டணம் வரை சுமார் 3 கி.மீ., தூரம் நடந்தே சென்றுள்ளனர்.திருச்செந்துார் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025