வாசகர்கள் கருத்துகள் ( 2 )
இவங்க அடங்கமாட்டானுக
இது ... மண் இங்கு சாதி ஒழிந்து ஒளிந்து விட்டது. எனவே தான் இங்கு எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி உள்ளது
துாத்துக்குடி : ஸ்ரீவைகுண்டம் அருகே, பஸ்சில் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த பிளஸ் 1 மாணவரை, வெளியே இழுத்து அரிவாளால் சரமாரியாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு சிறார்கள் உட்பட மூவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த தங்ககணேஷ் மகன் தேவேந்திரன், 17; பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர், நெல்லை தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார்.தேவேந்திரன் நேற்று ஆங்கில தேர்வு எழுதுவதற்காக, அரியநாயகிபுரத்தில் இருந்து தனியார் பஸ்சில் ஸ்ரீவைகுண்டம் சென்று கொண்டிருந்தார். கெட்டியம்மாள்புரம் பகுதியில் பஸ் சென்று கொண்டிருந்தபோது, மூன்று பேர் கும்பல், பஸ்சை வழிமறித்து ஏறியது.பஸ்சில் இருந்த தேவேந்திரனை கீழே இழுத்து வந்த அந்த கும்பல், அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டி, அங்கிருந்து தப்பியோடியது. இதைப்பார்த்த சக பயணியர் அலறி ஓட்டம் பிடித்தனர்.தகவலறிந்த ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., ராமகிருஷ்ணன் மற்றும் போலீசார், வெட்டுக்காயங்களுடன் கிடந்த தேவேந்திரனை மீட்டு, சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் நேரில் விசாரித்தார்.அரியநாயகிபுரம் மற்றும் கெட்டியம்மாள்புரம் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, கெட்டியம்மாள்புரம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன், 19, மற்றும் இரு சிறுவர்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.போலீசார் கூறியதாவது:கைதான லட்சு மணனின் தங்கையிடம், காதலிப்பதாக தேவேந்திரன் கூறியுள்ளார். இந்த விஷயம் லட்சுமணனுக்கு தெரிய வரவே, தன் உறவினர்களான இரு சிறுவர்களை அழைத்துச் சென்று, இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். முதற்கட்ட விசாரணையில் தெரியவந்த இந்த தகவல்களின் அடிப்படையில், தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர் தேவேந்திரன் பஸ் ஏற நின்ற இடத்தில், சேரகுளம் போலீஸ் நிலையத்திற்குட்பட்ட அரியநாயகிபுரம் சோதனைச்சாவடி உள்ளது. அங்கு, போலீசார் எப்போதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். தேவேந்திரன் பஸ்சுக்காக நேற்று காலை காத்திருந்தபோது, ஒரு பைக்கில் வந்த இரு சிறுவர்கள் அவரை கண்காணித்துள்ளனர்.தேவேந்திரன் பஸ் ஏறுவதை, அடுத்த நிறுத்தமான கெட்டியம்மாள்புரம் பஸ் நிலையத்தில் நின்ற சக நண்பரிடம் அவர்கள் கூறியுள்ளனர். பஸ்சை பின் தொடர்ந்து சென்ற அவர்கள், அங்கு காத்திருந்த நண்பருடன் சேர்ந்து பஸ்சை வழிமறித்து, தேவேந்திரனை அரிவாளால் வெட்டியுள்ளனர்.அரியநாயகிபுரம் சோதனைச்சாவடியில் இருந்து, சம்பவம் நடந்த இடம், 600 மீட்டர் துாரத்தில் உள்ளது. பட்டப்பகலில் பஸ்சில் பயணம் செய்த பள்ளி மாணவர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம், ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவங்க அடங்கமாட்டானுக
இது ... மண் இங்கு சாதி ஒழிந்து ஒளிந்து விட்டது. எனவே தான் இங்கு எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி உள்ளது