மேலும் செய்திகள்
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
போக்சோ வழக்கில் ஆசிரியர் கைது
14-Dec-2025
துாத்துக்குடி:நாடு முழுதும் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இந்நிலையில், துாத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தில் சுதந்திர தின விழா நடத்தப்படாததால் சர்ச்சை கிளம்பியுள்ளது.பா.ஜ., தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன் கூறியதாவது:மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று தேசியக்கொடி ஏற்றப்படவில்லை என, விசாரித்தபோது மேயர், கமிஷனர் வெளியூர் சென்றுவிட்டதாக தெரிவித்தனர். இங்கு, 10 லட்சம் மதிப்பீட்டில், 100 அடியில் புதிதாக நிறுவப்பட்ட கொடிக்கம்பத்தில் தேசியக்கொடி ஏற்றப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கொடியை ஏற்றாமல் புறக்கணித்திருப்பது கண்டிக்கப்பட வேண்டியது. கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், '100 அடி கம்பம் அமைக்கும் பணி நிறைவு பெறவில்லை. மேயர், கமிஷனர் சென்னையில் சுதந்திர தின விழாவில் கலந்து கொள்ள சென்றுவிட்டனர். அலுவலக மேல் பகுதியில் வழக்கம்போல தேசியக் கொடி ஏற்றப்பட்டது. நான்கு மண்டல அலுவலகங்களிலும் கொடி ஏற்றப்பட்டது. கிழக்கு மண்டல அலுவலகத்தில் துணை மேயர் ஜெனிட்டா தேசியக்கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெறவில்லை என்பது உண்மை' என்றனர்.
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025
14-Dec-2025