உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கழுகுமலையில் தேரோட்டம்

கழுகுமலையில் தேரோட்டம்

துாத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 15 கொடியேற்றத்துடன் துவங்கியது.விழா நாட்களில் தினமும் காலை மாலையில் வெவ்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று அதிகாலை 5:00 மணிக்கு கோயில் நடை திறந்து திருவனந்தல் பூஜை, காலசந்தி பூஜை நடந்தது. தொடர்ந்து சண்டிகேஸ்வரர் சட்ட ரதத்திலும், விநாயகர் பெருமான் கோ ரதத்திலும், தொடர்ந்து தேரில் கழுகாசலமூர்த்தி வள்ளி தெய்வானையுடன் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். 10ம் திருவிழாவான இன்று(மார்ச் 24) தீர்த்தவாரியும் தபசு காட்சியும் நாளை (மார்ச் 25)திருக்கல்யாண உற்ஸவமும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை