வாசகர்கள் கருத்துகள் ( 2 )
ஜாதி சான்றிதழ் ஜாதி அடையாளமா? இல்லையா? அதிகாரி
1960 கோளில் நெற்றியில் திருநீறு இல்லை என்றால் ஹெட் மாஸ்டர் எங்களை அடிப்பார் ஏண்டா குளிச்சியா இல்லையா என்று அது ஒரு காலம்.
ஸ்ரீவைகுண்டம்:துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே அரியநாயகிபுரத்தைச் சேர்ந்த பிளஸ் 1 மாணவர் தேவேந்திர ராஜ், 17, என்பவர் அரிவாளால் வெட்டப்பட்டார். இரண்டு சிறார்களை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.இந்நிலையில், மாவட்ட கலெக்டர் இளம்பகவத், எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் ஆகியோர் நேற்று ஸ்ரீவைகுண்டம் குமரகுருபரர் சுவாமிகள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்றனர். குற்ற வழக்குகளில் ஈடுபட்டால் படிக்கும்போது என்னென்ன பிரச்னைகள் வரும்; வேலைக்குச் செல்லும்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து மாவட்ட எஸ்.பி., ஆல்பர்ட் ஜான் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார்.மாவட்ட கலெக்டர் இளம்பகவத் பேசும்போது, ''பள்ளி மற்றும் வளாகத்தில் ஜாதி குறித்து மாணவர்கள் எந்த கருத்தும் பேசக்கூடாது, பள்ளி வளாகத்தில் ஜாதி குறித்த எழுத்துகள் மற்றும் அடையாளங்களை எழுதக்கூடாது,'' என அறிவுரை வழங்கினார்.பள்ளி வளாகம் மற்றும் பள்ளி வகுப்பறைகளில் வரையப்பட்டிருந்த ஜாதிய அடையாளங்கள் மற்றும் எழுத்துகளை அழிக்க அவர் உத்தரவிட்டார். அவற்றை மாணவர்கள் அழித்தனர்.
ஜாதி சான்றிதழ் ஜாதி அடையாளமா? இல்லையா? அதிகாரி
1960 கோளில் நெற்றியில் திருநீறு இல்லை என்றால் ஹெட் மாஸ்டர் எங்களை அடிப்பார் ஏண்டா குளிச்சியா இல்லையா என்று அது ஒரு காலம்.