உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஹரப்பா நாகரிகத்தை விட பழமையான செவ்வக வடிவ கிணறு கண்டுபிடிப்பு

ஹரப்பா நாகரிகத்தை விட பழமையான செவ்வக வடிவ கிணறு கண்டுபிடிப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடியைச் சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் செல்வரதி, பட்டினமருதுார் பகுதியில் ஆய்வு செய்த போது, தொன்மையான செவ்வக வடிவ கிணறு ஒன்றை கண்டுபிடித்துள்ளார். கிணறு, 'தோலவிரா ஹரப்பா' நாகரிகத்தை விட தொன்மையானதாக இருக்கும் என தெரியவந்தது. கற்களால் அடுக்குதல் கட்டுமான முறையில் வடிவமைக்கப்பட்ட அந்த கிணற்றின் தொன்மை தெரியாமல், பாதுகாப்பற்ற நிலையில் காணப்படுகிறது.ராஜேஷ் செல்வரதி கூறியதாவது:தொன்மையான செவ்வக வடிவ கிணறு குறித்து எந்த தகவலும் வருவாய் துறை ஆவணங்களில் இல்லை. 1983ல் நில உடமை சீர்திருத்தத்திற்கு முன்பும், -பின்பும் உள்ள வருவாய் துறை கிராம வரைபடம் மற்றும் புல வரைபடம் ஆகியவற்றில் பதிவேற்றம் செய்யப்படாமல் உள்ளது வியப்பாகவும், வேதனையாகவும் உள்ளது.கிணற்றின் போட்டோக்கள் மற்றும் காட்சிப்பதிவுகளை வி.ஏ.ஓ., வாயிலாக வருவாய் துறை உயர் அதிகாரிகளிடமும், இந்திய தொல்லியல் துறையின் திருச்சி மண்டல அதிகாரிகளிடமும் ஆவணப்படுத்தி உள்ளேன்.அந்த கிணற்றை உடனடியாக ஆய்வு செய்து, வரைபடங்களில் பதிவு செய்து அரசுடமையாக்கி, பாதுகாக்கப்பட்ட தொன்மை சின்னமாக அறிவிக்க வேண்டும். இதேபோன்று, தென்கடைசி பகுதியில் காணப்படும் ஏற்கனவே ஆவணப்படுத்தப்பட்ட வட்டக்கிணறு ஒன்றையும் ஆய்வு செய்ய வேண்டும்.பல வரலாற்று எச்சங்கள் தொன்மையான கிணறுகளுக்குள் புதைந்து காணப்படலாம். 'காலம் தாழ்த்தாது தொல்லியல் துறை அதிகாரிகள் துரிதமாக ஆய்வுகளை மேற்கொண்டு இந்த பகுதியின் கீழபட்டிணம் தொடர்பான வரலாற்று தொன்மையின் உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !