உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலை இருக்காது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலை இருக்காது: பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தூத்துக்குடி: மீண்டும் தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் மேற்கு தொடர்ச்சி மலை இருக்காது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, தூத்துக்குடி விமான நிலையத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் என்றைக்கு தி.மு.க. ஆட்சி வந்ததோ அன்றிலிருந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் ஒரு முறை இவர்கள் ஆட்சிக்கு வந்து விட்டால், மேற்கு தொடர்ச்சி மலையே இருக்காது. கனிம வளங்கள் அனைத்தும் கொள்ளை போகிவிடும்.

திராவிட மாடல் அரசு

போதைப் பொருட்கள் புழக்கம் காரணமாக, தமிழக மக்கள் தங்கள் குழந்தைகள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுவார்களோ என அச்சப்பட துவங்கி உள்ளனர். இதற்குக் காரணம் திராவிட மாடல் அரசு தான். மோடி மூன்றாவது முறையாக பிரதமராவதை 140 கோடி மக்களும் விரும்புகிறார்கள். நாளை நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும்.

தேசிய ஜனநாயக கூட்டணி

இண்டியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள் மக்கள் மத்தியில் பிரச்னைகளை உருவாக்கி வருகின்றனர். அனைத்து ஜாதியினரும், மதத்தினரும் சமமாக மதிக்கப்பட வேண்டும். தமிழகத்தில் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, இதுவரைக்கும் இல்லாத வெற்றி பெரும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

அப்புசாமி
ஏப் 26, 2024 11:44

நல்லது. மலைத்தடுப்பு போனால் கேரளாவில் அரபிக்கடல் மழை தமிழ்நாடு வரை வந்து பெய்யும்.


Sathya
ஏப் 25, 2024 23:33

perfect one. Not only western ghats, they will sell or handover Rameshwaram and Chennai also. worst government


RAAJ68
ஏப் 25, 2024 21:47

இப்போது நடந்தது நடக்க இருப்பது பாராளுமன்றத்துக்கு தேர்தல் என்னவோ சட்டசபைக்கு தேர்தல் நடப்பது போன்று அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறீர்கள் வேடிக்கையாக உள்ளது


hari
ஏப் 26, 2024 06:31

இப்போதே சொன்னால்தான் சில ஜென்மங்களுக்கு புரியும்


K.n. Dhasarathan
ஏப் 25, 2024 21:24

பொன்னார் சொல்கிறார் தி மு க வந்தால் மேற்கு தொடர்ச்சி மலை இருக்காது, பி ஜே பி வந்தால் இந்தியாவே இருக்காது ஏற்கனவே விற்ற பொது துறை நிறுவனங்கல் போல மீதி நிறுவனங்களையும் விற்று விடுவார்கள் எதையும் விற்க மாட்டோம் என்று உறுதி கொடுக்க முடியுமா ? பொன்னார் பதில் சொல்ல முடியுமா ?


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 26, 2024 05:49

பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மனசாட்சியுடன் நிறுவனத்தின் விசுவாசத்திற்கேற்ப பணி செய்தால் ஏன் நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்க வேண்டும் பின்னர் ஏன் விற்க வேண்டும் தமிழகத்தில் பஸ் பாடி பில்டிங் கம்பெனி ஒன்று ஈரோட்டில் பழைய சேரன் போக்குவரத்து கழகத்தின் அங்கமாக இயங்கி அனைத்து அரசு பேருந்துகள் கேர்ள அரசு பேருந்துகள் கர்நாடக அரசு பேருந்துகளுக்கு பஸ் பாடி பில்டிங் செய்து இலாபமுடன் இயங்கி வந்தது அதனை தோற்றுவித்ததும் தமிழக அரசு அதனை அழித்ததும் தமிழக அரசு பாஜக அரசு எந்த பொதுத்துறை நிறுவனத்தையும் அழிக்காமல் நஷ்டத்தில் இயங்கியது தனியாருக்கு பங்குகளை விற்று அதில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எவ்வித இழப்பும் வராமல் அரசுக்கென்று ஒரு குறிப்பிட்ட சதவிகித பங்குகளை வைத்து கொண்டு தான் தனியார் நடத்த அனுமதித்துள்ளது திராவிட கட்சிகள் போல் சுயநலத்திற்காக செளத் இண்டியா விஸ்கோஸ் கோவை சிறுமுகையில் இருந்தது ஸ்டெரிலைட் போன்று இழுத்து மூடி நாட்டிற்கும் அதில் பணியாற்றிய தொழிலாளிகளுக்கும் துரோகம் செய்ததில்லை தொழிற்சாலைகளை மூடும் முன்பு அதில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மாற்று வேலை வாய்ப்பு உருவாக்கி தந்து விட்டு தானே மூட வேண்டும் இப்படி சுயநல திராவிட அரசுகள் வேலையில் உள்ளவர்களை வேலை இல்லாதவர் ஆக்கி பின்னர் வேலை வாய்ப்பு குறைந்து விட்டது என மத்திய அரசை குறை சொல்வது இதற்கு தொழிலாளர் நண்பர் என சொல்லி கொண்டு இரட்டை வேடம் போடும் கம்யூனிஸ்ட்கள் உடந்தை


Barakat Ali
ஏப் 25, 2024 21:18

மொதல்ல இப்படிச்சொன்ன நீங்க ருக்கோணும்


Saran Venkat
ஏப் 25, 2024 21:16

உங்கள் பிஜேபி வந்தால் இந்தியாவே இருக்காது


Rajathi Rajan
ஏப் 25, 2024 20:26

நீங்க மீண்டும் ஆட்சிக்கு வாந்தால் இந்தியவே இருக்காது


Mangettel Sunil
ஏப் 25, 2024 23:18

நேர் பார்வையில் சிந்திப்பதை மக்கள் மறந்து வெகு நாள் ஆகி விட்டது, காமராஜரை தோற்கடித்த கூட்டம் எப்படி சிந்ததிக்கும், வியப்பு ஒன்றும் இலை


Kuppan
ஏப் 25, 2024 19:34

நல்லது தானே அப்ப ஈஸியா கேரளாவுக்கும் கர்நாடகாவுக்கு போயி வரலாம், பயண நேரம் குறையும்


venugopal s
ஏப் 25, 2024 19:21

நாட்டையே கூறு போட்டு விற்பவர்கள் இதைச் சொல்வது தான் வேடிக்கை!


vadivelu
ஏப் 25, 2024 20:45

சார் விவரமா சொல்லுங்க, நாட்டின் எந்த எந்த பகுதிகளை கூறு போட்டு விற்று விட்டார்கள் என்று ரூ200 க்கு உருட்ட கூடாது அவிங்க விற்றாலும் தப்புதான், இவிங்க விற்றாலும் தப்புதான்முட்டு கொடுப்பதற்கு முன் அது குட்டி சுவரா என்று பார்த்து கொடுங்க, இல்லையேல் நீங்களும் விழுந்துடுவீங்க


ஆ.செந்தில்குமார், முழு நேர சங்கி
ஏப் 25, 2024 18:59

இதை பார்த்துக்கொண்டு மத்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?


மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை