உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / துாத்துக்குடி மாநகராட்சியில் ஆளுங்கட்சி ஆதரவோடு முறைகேடாக குடிநீர் இணைப்பு, மக்கள் பாதிப்பு

துாத்துக்குடி மாநகராட்சியில் ஆளுங்கட்சி ஆதரவோடு முறைகேடாக குடிநீர் இணைப்பு, மக்கள் பாதிப்பு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாநகராட்சி பகுதிகளுக்கு, வல்லநாடு பகுதியில் இருந்து குழாய் மூலம் தாமிரபரணி ஆற்று தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கோடைகாலம் என்பதால் தற்போது ஆங்காங்கே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.மாநகராட்சி பகுதியில் ஆளுங்கட்சியினர் சிலர் முறைகேடாக குடிநீர் இணைப்புகளை வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மாநகராட்சியில் குடிநீர் இணைப்பு பெற மொத்தம் 19,990 ரூபாய் செலுத்த வேண்டும். ஆனால், ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், இரண்டு மடங்கு பணம் பெற்றுக் கொண்டு, பம்ப் ஆபரேட்டர்கள் உதவியோடு முறைகேடாக குடிநீர் இணைப்பு வழங்கி வருகின்றனர்.மேலும், வணிக ரீதியான இணைப்புகளுக்கு 50,000 ரூபாய் வரை பணம் பெறுகின்றனர். இதனால், மக்களுக்கு குடிநீர் வழங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. இதுதொடர்பாக மாநகாரட்சியில் புகார் தெரிவித்தாலும்,அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பது இல்லை.அமைச்சர் உள்ளிட்ட ஆளுங்கட்சி நிர்வாகிகள் ஆதரவோடு, மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் சிலர் தொடர்ந்து விதிமுறைகளை மீறி குடிநீர் இணைப்பு வழங்கி வருகின்றனர். இந்நிலையில், மாநகராட்சியில் முறையாக அனுமதியில்லாமல் குடிநீர் இணைப்பு பெற்ற குடியிருப்புக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.மேலும், அந்த பகுதியில் குடிநீர் விநியோக பணியினை கவனித்து வந்த ஒப்பந்த பணியாளர்கள் இருவர் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில், ஒருவர் அமைச்சருக்கு நெருக்கமானவர் என கூறப்படுகிறது.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:மாநகராட்சி அனுமதி பெறாமல் முறைகேடாக குடிநீர் இணைப்பு எடுத்தவர்கள் தாமாக முன்வந்து குடிநீர் இணைப்பை துண்டித்துக் கொள்ள வேண்டும். முறையாக விண்ணப்பித்து குடிநீர் இணைப்பு பெற்றுக் கொள்ளலாம்.விதிமுறையை மீறி யாரேனும் குடிநீர் இணைப்பு பெற்றால் அபராத தொகை விதிக்கபடுவதுடன் உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ