உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில்பட்டிl அகற்றுவதை எதிர்த்து விதிமுறை மீறி ஊர்வலம்

ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் கோவில்பட்டிl அகற்றுவதை எதிர்த்து விதிமுறை மீறி ஊர்வலம்

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வளர்ந்து வரும் நகரமாக உள்ளது. சாலை போக்குவரத்து வசதி, ரயில் போக்குவரத்து வசதி அதிகம் இருப்பதால், புறநகர் பகுதிகள் வளர்ச்சி அடைந்து வருகின்றன. மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால், நகரின் பெரும்பாலான சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. அதுமட்டுமின்றி, போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுகிறது.எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கூட்டமைப்பினர் வலியுறுத்தினர். இதுதொடர்பாக, கோட்டாட்சியரிடம் அவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில், தற்காலிக ஆக்கிரமிப்புகளை மே 9ம் தேதி அகற்றுவது என, முடிவு எடுக்கப்பட்டது.ஆனால், அதற்கு, கோவில்பட்டி நகராட்சி தலைவரான தி.மு.க., நகர தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியின் கோவில்பட்டி நகரச் செயலர் சீனிவாசன் தலைமையில் சாலையோர வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் சாலையோர வியாபாரிகள் நேற்று ஊர்வலமாக சென்று, அதிகாரிகளிடம் மனுக்களை வழங்கினர். ஆனால், மக்கள் நலனை கருதி, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என, பல தரப்பினர் வலியுறுத்துகின்றனர். ஆனால், அகற்ற எதிர்ப்பு தெரிவித்து ஊர்வலமாக சென்று, மனு அளித்திருப்பது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும்போது, மா.கம்யூ., நகரச் செயலர் சீனிவாசன் தலைமையில் ஊர்வலமாக சென்றது, விதிமுறை மீறல் என குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை