மேலும் செய்திகள்
த.வெ.க., நிர்வாகி செயலால் பரபரப்பு
26-Dec-2025
பஸ் ஸ்டாண்டில் கூரை பூச்சு பெயர்ந்தது
18-Dec-2025
உரிமை தொகை கேட்டு பெண்கள் முற்றுகை போராட்டம்
17-Dec-2025
லாரிகள் மோதல்; டிரைவர் உயிரிழப்பு
15-Dec-2025
துாத்துக்குடி, : துாத்துக்குடி மாவட்டத்தில், மே மாதத்தில் எட்டு கொலைகள் நடந்துள்ளன. கஞ்சா வழக்குகளில் தொடர்புடையவர்களால், துாத்துக்குடி குரூஸ்புரம் வக்கீல் குமாஸ்தா பால்ராஜ், 56, தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார்.ஏப்ரலில் கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய மாரியப்பன் என்பவர் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறிலும், மது போதையில் தாயை திட்டிய சத்தியமூர்த்தி என்பவரை அவரது 15 வயது மகன் கொலை செய்தது, மது போதையில் தாயை மகன் வெட்டி கொலை செய்தது என, 20 நாட்களில் பல கொலைகள் நடந்துள்ளன.இதற்கிடையே, மே 11 இரவில் குடும்ப தகராறில் துாத்துக்குடி வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம் தன் வீட்டின் அருகே கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரியின் கணவர் உட்பட ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். இதேபோல, 12ம் தேதி இரவு திருச்செந்துாரில் டாஸ்மாக் மதுக்கூடம் அருகே கட்டட தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.ஆழ்வார்கற்குளம் கீழத்தெருவை சேர்ந்த கட்டட தொழிலாளியான அழகுமுத்து, 33. ஆறுமுகநேரியில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். அடைக்கலாபுரம் காட்டு பகுதியில் நண்பர்களுடன் குடிபோதை தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.மொத்தம், 12 நாட்களில் 8 கொலைகள் நடந்துள்ளன. இந்நிலையில், துாத்துக்குடி மாவட்ட எஸ்.பி., பாலாஜி சரவணன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியதாவது:துாத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கொலைகளில் சம்பந்தப்பட்டவர்கள் உடனுக்குடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு, 52 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது.ஆறு கொலை சம்பவங்களில், ஒன்று மகன், தந்தையையும், இரண்டு சம்பவங்கள் கணவராலும், மற்றொன்று தங்கை கணவராலும் குடும்ப தகராறில் நடந்துள்ளன. பிற இரு கொலைகள், நண்பர்களுக்குள் பிரச்னையில் நடந்துள்ளன. கஞ்சா போதையில் கொலை சம்பவங்கள் நடந்துள்ளதாக மிகைப்படுத்தி கூறப்படுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
26-Dec-2025
18-Dec-2025
17-Dec-2025
15-Dec-2025