உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / விடுதியில் மாணவி மர்ம சாவு

விடுதியில் மாணவி மர்ம சாவு

தூத்துக்குடி:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அசோக்நகரைச் சேர்ந்த அண்ணாதுரை மகள் ஸ்ரீதேவி 22. தூத்துக்குடியில் உள்ள தனியார் அகாடமியில் வங்கிப் பணி தேர்வுக்கு பயின்று வந்தார்.தூத்துக்குடி மேலூர் பங்களா தெருவில் தனியார் விடுதியில் தங்கி இருந்தார். நேற்று மதியம் சாப்பிட்ட பிறகு படித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மயங்கி விழுந்தார். சக மாணவிகள் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவமனை கொண்டு சென்றனர். அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். மத்திய பாகம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ