மேலும் செய்திகள்
துபாய் தொழிலதிபர் வெட்டி கொலை
09-Dec-2025
எஸ்.ஐ., கணவர் கொலை வழக்கில் விவசாயி கைது
05-Dec-2025
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
துாத்துக்குடி:முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துாருக்கு, உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.கடந்த சில மாதங்களாக கோவிலுக்கு வரும் பக்தர்கள் முகம் சுழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்ட கழிவுநீர் தொட்டியில் இருந்து அதிகளவில் கழிவுநீர் வெளியேறுகிறது.அந்த கழிவு நீர் சன்னிதி தெருவில் பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில் தேங்கி கிடப்பதால், துார்நாற்றம் வீசி, சுகாதார கேடு ஏற்படுத்துகிறது.சாலையில் பரவியுள்ள கழிவு நீரை, காலில் செருப்பு கூட போடாமல் பக்தர்கள் மிதித்து செல்கின்றனர். இதற்கு நகராட்சி நிர்வாகம் தீர்வு காண வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து திருச்செந்துார் பகுதி மக்கள் கூறியதாவது:பாதாள சாக்கடை திட்டம் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. இதனால் வீடுகள், விடுதிகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களில் இருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையின் நடுவே போகிறது.பாதாள சாக்கடை திட்டத்தை மறு சீரமைப்பு செய்து, பெரிய குழாய்களை பதித்து கழிவுநீரை வெளியேற்றினால் மட்டுமே இந்த பிரச்னைக்கு தீர்வு காண முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, திருச்செந்துார் நகராட்சி கமிஷனர் கண்மணி கூறியதாவது:கோவிலுக்கு பக்தர்கள் நடந்து செல்லும் சன்னிதி தெருவில், கடந்த சில நாட்களாக கழிவு நீர் ஆறாக ஓடியது. ஆய்வு செய்தபோது, ஹோட்டல் நிர்வாகத்தினர் கழிவு நீரை தேக்கி, மின் விசை பம்பு மூலம் வெளியேற்றி வந்தது கண்டறியப்பட்டது.இதையடுத்து அந்த ஹோட்டலுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கழிவு நீரை வெளியேற்ற பயன்படுத்திய விசைப் பம்பும் பறிமுதல் செய்யப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.
09-Dec-2025
05-Dec-2025
04-Dec-2025