உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 140 ஆண்டு பஞ்சாலை மூடல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

140 ஆண்டு பஞ்சாலை மூடல் ஊழியர்கள் தர்ணா போராட்டம்

துாத்துக்குடி:துாத்துக்குடி கடற்கரை சாலையில், 140 ஆண்டுகளுக்கு முன் மதுரா கோட்ஸ் பஞ்சாலை துவங்கப்பட்டது. இங்கிலாந்தைச் சேர்ந்த சகோதரர்களால் துவங்கப்பட்ட ஆலை மதுரை மற்றும் அம்பாசமுத்திரத்தில் இயங்கி வருகிறது.கடந்த மாதம் முதல் துாத்துக்குடி மதுரா கோட்ஸ் ஆலையை மூடுவதாக நிர்வாகம் அறிவித்தது. அங்கு வேலை பார்த்த 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு முறையாக நோட்டீஸ் வழங்காமல், அவர்களை வலுக்கட்டாயமாக வேலையில் இருந்து நீக்கி உள்ளது.அவர்களுக்கான பணப்பலன்கள் முறையாக வழங்கப்படவில்லை என, புகார் எழுந்தது. பாதிக்கப்பட்ட, 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் துாத்துக்குடி மதுரா கோட்ஸ் ஆலை முன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.அவர்களுடன் போலீசார் பேச்சு நடத்தினர். ஆலை நிர்வாகம் மீது புகார் அளித்தால், பேச்சு நடத்தி தீர்வு காணப்படும் என காவல்துறையினர் கூறினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்தனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:மதுரை, அம்பாசமுத்திரம் மதுரா கோட்ஸ் ஆலை லாபத்தில் இயங்கி வரும் நிலையில், துாத்துக்குடி ஆலையை மட்டும் நிர்வாகம் மூடி உள்ளது. தொழிலாளர்களை வலுக்கட்டாயமாக பணியில் இருந்து நீக்கியுள்ளது. எங்களுக்கு வழங்க வேண்டிய பண பலன்களை வழங்காமல் ஏமாற்றி வருகிறது. தமிழக அரசு தலையிட்டு எங்களுக்கு உரிய பணப்பலன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மூடப்பட்டுள்ள ஆலையை திறக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை