வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தீராவிஷ மாடல் சிறார்கள்
மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற 2 பேர் கைது
14-Jan-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி புதுகிராமத்தில் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடந்த போது, சிறார்கள் எட்டு பேர் திடீரென கூட்டத்திற்குள் புகுந்து போதையில் ரகளையில் ஈடுபட்டனர்.அப்பகுதியைச் சேர்ந்த கோமதிசங்கர், 24, அவர்களை கண்டித்து அனுப்பினார். நிகழ்ச்சி முடிந்த பின், மீண்டும் அங்கு வந்த அவர்கள், மேடைக்கு பின்புறம் நின்று கொண்டிருந்த கோமதிசங்கரை மிரட்டி, பெட்ரோல் நிரப்பபட்ட மதுபாட்டிலை அவர் மீது வீசினர்.அவர் விலகியதால், அது சாலையில் விழுந்து வெடித்து தீப்பிடித்தது. அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் உடனடியாக தீயை அணைத்தனர். கோமதிசங்கர் போலீசில் புகார் அளித்தார்.கோவில்பட்டி கிழக்கு போலீசார், எட்டு சிறார்கள் மற்றும் கோவில்பட்டி பழைய அப்பநேரியை சேர்ந்த சூரியகுமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர். சிறார்கள் நெல்லை சிறுவர் சீர்திருத்த பள்ளியிலும், சூரியகுமார் கோவில்பட்டி கிளை சிறையிலும் அடைக்கப்பட்டனர்.
தீராவிஷ மாடல் சிறார்கள்
14-Jan-2025