உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / இடுப்பில் குவார்ட்டர் பாட்டில் வயிறு கிழிந்து வாலிபர் பலி

இடுப்பில் குவார்ட்டர் பாட்டில் வயிறு கிழிந்து வாலிபர் பலி

துாத்துக்குடி:திருநெல்வேலி மாவட்டம், பேட்டையை சேர்ந்த இசக்கிராஜா, 36, துாத்துக்குடி சண்முகபுரத்தில் ஒரு வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்தார். வேலை முடிந்ததும் நேற்று முன்தினம் இரவு சண்முகபுரம், அம்மன் கோவில் தெரு வழியாக வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது, திடீரென கால் தவறி கீழே விழுந்த இசக்கிராஜாவின் வயிற்று பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியது. போலீசார் அவரை மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.தென்பாகம் போலீசார் கூறியதாவது:இசக்கிராஜாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது. மதுபாட்டிலை வாங்கி இடுப்பில் மறைத்து, வீட்டுக்கு கொண்டு சென்றுள்ளார். கால் தவறி கீழே விழுந்ததில், பாட்டில் உடைந்து அவரது வயிற்று பகுதியை கிழித்தது. அதிக ரத்தம் வெளியானதால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ