பேண்ட் வாத்திய கலைஞர் கொலை
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் ஆபிரகாம், 64; பேண்ட் வாத்திய கலைஞர். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. நேற்று முன்தினம் மது அருந்திய ஆபிரகாம், போதை தலைக்கேறியதும் அந்த வழியாக சென்றவர்களை அவதுாறாக பேசினார்.பக்கத்து வீட்டைச் சேர்ந்த கட்டட தொழிலாளி முகமதுஅலி ஜின்னா, 50, என்பவர் அவரை கண்டித்தார். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த முகமதுஅலி ஜின்னா கீழே கிடந்த, 'ஹாலோ பிளாக்' கல்லால் ஆபிரகாம் தலையில் தாக்கினார். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். வடபாகம் போலீசார், வீட்டில் பதுங்கி இருந்த முகமதுஅலி ஜின்னாவை கைது செய்தனர்.