மேலும் செய்திகள்
ஆம்புலன்ஸ் மோதியதில் டிங்கரிங் தொழிலாளி பலி
10-Apr-2025
சாயல்குடி: சாலையோரம் நின்றிருந்த இரு சிறார்கள் கார் மோதி இறந்தனர்.ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சொர்ணராஜன். இவரது மகள் சண்முகப்பிரியா, 13; எட்டாம் வகுப்பு படித்தார். இவரது உறவினர் ஹரி சூர்யா பிரகாஷ், 14; ஒன்பதாம் வகுப்பு படித்தார்.இருவரும் பத்ரகாளி அம்மன் கோவில் விழாவிற்கு சென்று விட்டு, வீட்டிற்கு செல்ல, கிழக்கு கடற்கரை சாலை ஓரமாக நின்றிருந்தனர். இரவு 12:00 மணிக்கு, ராமநாதபுரத்திலிருந்து துாத்துக்குடி நோக்கி சென்ற கார், கட்டுபாட்டை இழந்து இவர்கள் மீது மோதியதில் இருவரும் துாக்கி வீசப்பட்டனர். சம்பவ இடத்திலேயே சண்முகப்பிரியா உயிரிழந்தார். சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஹரி சூரிய பிரகாஷும் அங்கு உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கர்நாடக மாநிலம், மாண்டியாவைச் சேர்ந்த கார் டிரைவர் சிவா, 45, என்பவரை சாயல்குடி போலீசார் கைது செய்தனர்.
10-Apr-2025