திருச்செந்துாரில் கடலோர ஆராய்ச்சி குழு ஆய்வு
துாத்துக்குடி:திருச்செந்துார் கடலோர பகுதிகளில், தேசிய கடலோர ஆராய்ச்சி குழுவினர் நேற்று ஆய்வு நடத்தினர்.திருச்செந்துார் கோவில் கடற்கரை பகுதியில் 50 அடி நீளத்திற்கு 8 அடி ஆழத்திற்கு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதியில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.மத்திய புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும், தேசிய கடலோர ஆராய்ச்சி மைய விஞ்ஞானி ராமநாதன் தலைமையில் ஒன்பது பேர் கொண்ட குழுவினர் நேற்று கடற்கரையில் ஆய்வு மேற்கொண்டனர். இன்று, டிரோன் மற்றும் ஜி.பி.எஸ்., கருவிகளால் கடற்கரையில் ஆய்வு செய்ய உள்ளனர்.