உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  நடுக்கடலில் கடத்தல் கும்பலை துரத்தி பிடித்த சுங்கத்துறையினர்

 நடுக்கடலில் கடத்தல் கும்பலை துரத்தி பிடித்த சுங்கத்துறையினர்

துாத்துக்குடி: இலங்கைக்கு படகில் பொருட்களை கடத்தி சென்ற கும்பலை, சுங்கத்துறையினர் நடுக்கடலில் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துாத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளில் இருந்து இலங்கைக்கு படகில் பல்வேறு பொருட்கள் கடத்தப்படுவது தொடர்கிறது. இந்நிலையில், கடத்தல் கும்பலை கண்காணிக்கும் வகையில், துாத்துக்குடி சுங்கத்துறை கண்காணிப்பாளர் முருகன் தலைமையிலான குழுவினர், நேற்று முன்தினம் கடலில் ரோந்து சென்றனர். அவர்கள் படகை கண்டதும், ஒரு பைபர் படகு, நடுக்கடலில் வேகமாக சென்றுள்ளது. சுங்கத்துறையினர், 45 நிமிடம் துரத்திச் சென்று, அந்த படகை காசு வாரி தீவு அருகே மடக்கி பிடித்தனர். படகை சோதனை செய்ததில், இலங்கைக்கு கடத்தி செல்லப்பட்ட, 2,500 கிலோ பீடி இலைகள், 8 கேன்களில் 400 லிட்டர் பெட்ரோல் ஆகியவை இருப்பது தெரிய வந்தது. பீடி இலை மூட்டைகள் மற்றும் பெட்ரோலுடன் கடத்தலில் ஈடுபட்ட பைபர் படகை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள், அதை கரைக்கு கொண்டு வந்தனர். கடத்தலில் ஈடுபட்ட திரேஸ்புரம் ஜெயபால், 51, சுனாமி காலனி ஜெனிஸ்டன், 31, ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ