உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பெண் அடித்து கொலை போதை வாலிபர் கைது

பெண் அடித்து கொலை போதை வாலிபர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி அருகே சாயர்புரம் பட்டாண்டிவிளையைச் சேர்ந்தவர் ஜெபா வயலட், 26. கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை பிரிந்த இவர், 2022ல் அதே பகுதி லாரி டிரைவர் லிங்கராஜை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். முதல் கணவருடனான விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதுதொடர்பாக ஜெபா வயலட் அடிக்கடி நீதிமன்றத்திற்கு சென்று வந்தார்.அப்போது, கட்டபொம்மன் நகரை சேர்ந்த மாரிகனி, 25, என்பவருடன் நெருங்கி பழகியுள்ளார். ஜெபா வயலட்டை, மாரிகனி கடந்த 16ம் தேதி ஒரு வீட்டிற்கு அழைத்துச் சென்று தாலி கட்டியுள்ளார். பின், இருவரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது, இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.ஆத்திரமடைந்த மாரிகனி, அங்கு கிடந்த கம்பால் ஜெபா வயலட்டை தாக்கியதில், தலையில் பலத்த காயமடைந்த அவர், துாத்துக்குடி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று உயிரிழந்தார். தென்பாகம் போலீசார் மாரிகனியை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

நிக்கோல்தாம்சன்
ஏப் 20, 2025 04:43

கலைஞர் விதவன் திட்டமா டாஸ்மாக்? வழக்கமா அது விதவைகளை மட்டுமே உருவாக்கும் என்ற போர்வையை உடைத்து தூளாக்கி பெண்களையும் குடிக்க வைக்கும் அற்புத திட்டத்தை கொண்டுவந்துள்ளார் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் , அவருக்கு எல்லாம் ஒரு ஓ போடுங்க


புதிய வீடியோ