மேலும் செய்திகள்
மாஜி அமைச்சர் நினைவு நாள் நாளை அனுசரிப்பு
04-Nov-2024
துாத்துக்குடி:மதுரை திருநகர் பி.ஆர்.சி., காலனியை சேர்ந்தவர் கண்ணன், 49. துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் உள்ள துணை மின் அலுவலகத்தில் ஜூனியர் இன்ஜினியராக வேலைபார்க்கிறார்.நேற்று முன்தினம் பணியில் இருந்த கண்ணன், அலுவலகத்தில் தனியாக இருந்த பெண் ஊழியர் ஒருவரிடம் பாலியல் ரீதியாக அத்துமீறி நடக்க முயன்றாராம். பாதிக்கப்பட்ட பெண், போலீசில் புகார் அளித்தார்.விசாரணை நடத்திய, சாத்தான்குளம் போலீசார் நேற்று கண்ணனை கைது செய்தனர். கண்ணன், இதற்கு முன் பணி செய்த இடங்களிலும் பாலியல் ரீதியான குற்றச்சாட்டில் சிக்கியதால் தான், சாத்தான்குளத்திற்கு இடமாறுதல் செய்யப்பட்டார் என போலீசார் கூறினர்.
04-Nov-2024