மேலும் செய்திகள்
வாலிபரை எரித்துக்கொன்ற 4 பேருக்கு ஆயுள் தண்டனை
23 hour(s) ago
கள்ளபிரான் கோவிலுக்குள் போதை ஆசாமி மர்மச்சாவு
11-Sep-2026
காஸ் சிலிண்டர்கள் திருட்டு: இருவர் கைது
08-Sep-2026
தூத்துக்குடி:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாசித்திருவிழா கொடியேற்றத்தையொட்டி நேற்று மாலை யானைமீது கொடிப்பட்டம் வீதி உலா நடந்தது.இக்கோயிலில் மாசித் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதையொட்டி நேற்று மாலை 14 ஊர் செங்குந்த முதலியார் உறவின்முறை மண்டகப்படி மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்பட்ட கொடிப்பட்டம் யானை மீது கொண்டுவரப்பட்டது. இன்று கொடியேற்றத்திற்குப்பின் கொடிமரத்திற்கு அபிேஷகம், தீபாராதனை நடக்கிறது. பிப்.20ல் மாலை சுவாமி தங்கசப்பரத்தில் சிவப்பு சாத்தியும், பிப்.21 அதிகாலை 5:00 மணிக்கு பெரிய வெள்ளிசப்பரத்தில் வெள்ளைச் சாத்தியும், காலை 11:00 மணிக்கு பச்சை கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தி எழுந்தருளி வீதி உலா வருகிறார். பிப்.23 காலையில் தேரோட்டம், பிப்.24ல் தெப்பத் திருவிழா நடக்கிறது.
23 hour(s) ago
11-Sep-2026
08-Sep-2026