உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு

 கவின் கொலை: எஸ்.ஐ., ஜாமின் ஒத்திவைப்பு

மதுரை: துாத்துக்குடி மாவட்டம் ஆறுமுகமங்கலம் கவின். ஐ.டி., நிறுவன பொறியாளர். இவர் ஒரு பெண்ணை காதலித்தார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெண்ணின் சகோதர் சுர்ஜித். இவர் திருநெல்வேலியில் கவினை கொலை செய்தார். பின் சுர்ஜித் போலீசில் சரணடைந்தார். சுர்ஜித்தின் தந்தையான எஸ்.ஐ.,சரவணன் கைது செய்யப்பட்டார். சி.பி.சி.ஐ.டி.,போலீசார் விசாரிக்கின்றனர். இந்நிலையில் சரவணன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த ஜாமின் மனுவில், ''சம்பவத்தன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சம்பவத்திற்கும் எனக்கும் தொடர்பில்லை. கைதாகி 98 நாட்களாகிறது. ஜாமின் அனுமதிக்க வேண்டும்,'' என்றார். நீதிபதி கே.முரளி சங்கர் விசாரித்தார். கொலையான கவினின் தாய் தரப்பில் இதுகுறித்து ஆவணங்கள் தாக்கல் செய்து, வாதிட அவகாசம் கோரப்பட்டது. நீதிபதி விசாரணையை நவ., 24க்கு ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி