உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தீ வைக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் பலி

தீ வைக்கப்பட்ட சிறுமி மருத்துவமனையில் பலி

எட்டயபுரம்:காதல் தகராறில் இரு வாலிபர்களால் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைக்கப்பட்ட, 17 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.துாத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகே இளம்பவனம் கிராமத்தைச் சேர்ந்த அய்யனார் - காளியம்மாள் தம்பதியின், 17 வயது சிறுமி, கடந்த 23ம் தேதி கீழநம்பிபுரத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தனியாக இருந்தார். அப்போது, சிறுமியின் அலறல் சத்தத்தைக் கேட்டு, அங்கிருந்தவர்கள் உள்ளே சென்று பார்த்தனர்.உடலில் தீப்பற்றிய நிலையில் கூச்சலிட்ட சிறுமியை மீட்ட அவர்கள், சிகிச்சைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். எட்டயபுரம் போலீசார், சிறுமியின் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பிய பரமக்குடியைச் சேர்ந்த சந்தோஷ், 23, அவரது நண்பர் முத்தையா, 24, ஆகியோரை கைது செய்து, பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே, மருத்துவமனையில் சிறுமி நேற்று உயிரிழந்தார்.கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்த எட்டயபுரம் போலீசார், தற்போது கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி