உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி /  ஆய்வுக்கு வந்த இடத்தில் அரசு இணை செயலர் மரணம்

 ஆய்வுக்கு வந்த இடத்தில் அரசு இணை செயலர் மரணம்

துாத்துக்குடி: துாத்துக்குடியில் ஆய்வுக்கு வந்த இடத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சட்டசபை இணை செயலர் நேற்று மரணமடைந்தார். தமிழக சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வபெருந்தகை தலைமையிலான குழுவினர் துாத்துக்குடி மாவட்டத்தில் நேற்று ஆய்வு செய்வதாக இருந்தது. குழுவில் இடம் பெற்றிருந்த சிலர் நேற்று முன்தினம் இரவு துாத்துக்குடி வந்த னர். துாத்துக்குடி அரசு விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த சட்டசபை இணை செயலர் ரமேஷுக்கு திடீரென உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. மயக்கமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு துாத்துக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த ரமேஷின் உடல் நிலை மிகவும் மோசமான நிலையில், அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து, நேற்று நடக்க இருந்த ஆய்வு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், சிகிச்சை பலனின்றி ரமேஷ் நேற்று இறந்தார். அவரது உடல் சென்னை, அம்பத்துார் பூம்புகார் நகருக்கு கொண்டு செல்லப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி