உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பெண் பற்றி அவதுாறு பரப்பியவர் கைது

பெண் பற்றி அவதுாறு பரப்பியவர் கைது

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் ராபின்ஸ்டன் ஜேம்ஸ், 45, குட் நியூஸ் என்ற பெயரில் கிறிஸ்துவ திருமண தகவல் மையம் நடத்தி வருகிறார். அங்கு, தங்கலதா, 47, என்பவர் வேலை பார்க்கிறார். இவர், கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:என் கணவர் ஜோதிகுமார், 12 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். கோவில்பட்டி நாடார் மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி இயக்குநராக பணியாற்றி வரும் முத்துக்குமார் என்பவருடன், வாட்ஸாப்பில் பேசுவது போல ஒரு ஆவணத்தை கம்ப்யூட்டரில் திருமண தகவல் மைய உரிமையாளர் ராபின்ஸ்டன் ஜேம்ஸ் தயார் செய்துள்ளார்.புலவர் செல்வம் என்ற பெயரில், போலி முகவரி மூலம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் வீடுகளுக்கு தனித்தனியாக கடிதம் அனுப்பி உள்ளார்.இவ்வாறு அதில் கூறி உள்ளார்.விசாரணை நடத்திய கோவில்பட்டி மேற்கு போலீசார் கிறிஸ்துவ திருமண தகவல் மைய உரிமையாளர் ராபின்ஸ்டன் ஜேம்சை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ