உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / 3 வயது குழந்தை கொலை மனநலம் பாதித்த தாய் கைது

3 வயது குழந்தை கொலை மனநலம் பாதித்த தாய் கைது

துாத்துக்குடி,:திருச்செந்துார் அருகே 3 வயது குழந்தையை கொன்றதாக, அவரது தாயை போலீசார் கைது செய்தனர்.துாத்துக்குடி மாவட்டம், திருச்செந்துார் அருகே குமாரபுரத்தை சேர்ந்த பெரியசாமி - பார்வதி தம்பதியின், 3 வயது குழந்தை ஆதிரா, நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்டார். வீட்டில், குழந்தையுடன் தாய் தனியாக இருந்த போது, நகையை கேட்டு குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு, மர்மநபர் ஒருவர் தப்பியோடிவிட்டதாக அவர் கூறினார். திருச்செந்துார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், குழந்தையை அவரது தாய் கொன்றது தெரிந்து, அவரை நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:ஓராண்டுக்கு மேலாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், திருநெல்வேலியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் பார்வதி சிகிச்சை பெறுகிறார். இந்நிலையில், திடீரென குழந்தை ஆதிராவை, அவர் கொலை செய்துள்ளார். குடும்பத்தினருக்கும், போலீசுக்கும் பயந்து, நகைக்காக மர்மநபர் கொலை செய்ததாக, அவர் நாடகமாடி உள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை