உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / கார் கவிழ்ந்த விபத்தில் தாய், மகன் பலி

கார் கவிழ்ந்த விபத்தில் தாய், மகன் பலி

துாத்துக்குடி:கோவிலுக்குச் சென்ற வழியில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் தாய், மகன் உயிரிழந்தனர்.சேலம், சூரமங்கலத்தைச் சேர்ந்த ராஜ்குமார், குடும்பத்துடன் காரில் திருச்செந்துார் கோவிலுக்கு புறப்பட்டார். மதுரை --- துாத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் எட்டையபுரம், துரைசாமிபுரம் விலக்கு அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்தது.இதில், ராஜ்குமார் மனைவி தமிழரசி, 32, மகன் அஸ்வரதன், 5, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரை ஓட்டிய ராஜ்குமார், அவரது உறவினர்கள் விஜயா, தாமரைச்செல்வி, அவரது மகன் சபரீசன் உட்பட ஆறு பேர் படுகாயமடைந்தனர்.எட்டையபுரம் போலீசார் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை