உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / திருச்செந்துார் கோயில் நிர்வாகம் புதிய அறிவிப்பு

திருச்செந்துார் கோயில் நிர்வாகம் புதிய அறிவிப்பு

துாத்துக்குடி:திருச்செந்துார் கோயில் கும்பாபிஷேகத்திற்காக அமைக்கப்பட்டுள்ள வேள்வி பூஜையில் செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் வரும் 7ல் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை தமிழில் நடத்த, நாம் தமிழர் கட்சி சார்பில் சமீபத்தில் வலியுறுத்தப்பட்டது. பல்வேறு அமைப்பினரும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த வலியுறுத்தினர்.இந்நிலையில், கோயில் நிர்வாகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வரும் 7ல் காலை 6:15 மணி மேல் 6:50 மணிக்குள் திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற உள்ளது. இதற்காக 8000 சதுர அடியில், 76 குண்டங்களுடன் பிரம்மாண்டமான வேள்விச்சாலை அமைக்கப்படுகிறது.வேள்விச்சாலை வழிபாடு நாட்களில் வேத பாராயணம் திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதஸ்வர இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும்.மேலும் காலை 7:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மற்றும் மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, 64 ஓதுவார் மூர்த்திகளை கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ், மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெறும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி