மேலும் செய்திகள்
நேபாளம் பள்ளத்தாக்கில் ஜீப் கவிழ்ந்து 8 பேர் பலி
26-Oct-2025
துாத்துக்குடி: பள்ளி வேன் மீது கார் மோதிய விபத்தில், தனியார் ஊழியர் உயிரிழந்தார்; இரண்டு மாணவர்கள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே சாத்துார் சாலையில் அமைந்துள்ள எம்.எம்.வித்யாஷ்ரம் பள்ளிக்கு சொந்தமான வேன், மாணவ - மாணவியரை பள்ளிக்கு அழைத்து செல்வதற்காக நேற்று காலை நாலாட்டின்புத்துார் சென்று கொண்டிருந்தது. கருப்பசாமி வேனை ஓட்டினார். உதவியாளர் அய்யம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகள் வேனில் இருந்தனர். திருநெல்வேலி --- மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மதுரை நோக்கி சென்று கொண்டிருந்த கார் திடீரென பள்ளி வேன் மீது மோதியது. இதில், காரில் இருந்த தனியார் நிறுவன ஊழியரான திருநெல்வேலி மாவட்டம், ஏர்வாடியைச் சேர்ந்த ஷேக் சையது சபீன், 55, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கார் டிரைவர் அகஸ்டன், பள்ளி வேன் டிரைவர் கருப்பசாமி உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர். கோவில்பட்டி மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.
26-Oct-2025