உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / பா.ஜ., பிரமுகர் மீது பாலியல் வழக்கு

பா.ஜ., பிரமுகர் மீது பாலியல் வழக்கு

துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன், 39; பா.ஜ., முன்னாள் நகர தலைவர். திருமணமான பாலசுப்பிரமணியனுக்கு அப்பகுதியை சேர்ந்த கணவரை பிரிந்து வாழ்ந்த 28 வயது பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.இரண்டாவது திருமணம் செய்து கொள்வதாக கூறி, அவர் நெருங்கி பழகிய நிலையில், சில மாதங்களுக்கு முன் அப்பெண்ணுக்கு, பெண் குழந்தை பிறந்தது. குழந்தையை பறித்துக் கொண்டு மிரட்டியதாக, பாலசுப்பிரமணியன் மீது பெண் போலீசில் புகார் அளித்தார்.இது தொடர்பாக, நம் நாளிதழில் டீக்கடை பெஞ்ச் பகுதியில் செய்தி வெளியானது.இதையடுத்து, கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் நேற்று முன்தினம் பெண்ணை அழைத்து விசாரணை நடத்தினர். டி.எஸ்.பி., ஜெகநாதனும் விசாரித்தார்.பின், திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் பாலசுப்பிரமணியன் மீது மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாகியுள்ள பாலசுப்பிரமணியனை பிடிக்க இரு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறினர். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி