உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகனுக்கு வலை

மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகனுக்கு வலை

துாத்துக்குடி: குடும்பத் தகராறில், மாமனாரை கல்லால் தாக்கி கொன்ற மருமகனை போலீசார் தேடுகின்றனர். துாத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா, குறுக்குச்சாலையை சேர்ந்தவர் மரிய ஆக்னஸ் செல்வன், 44. கூலி தொழிலாளி. இவரது அண்ணன் மகள் முகிலா என்பவர், கடந்த ஆண்டு கீழசெய்தலையை சேர்ந்த மாரிசெல்வம், 25, என்பவரை காதலித்து திருமணம் செய்தார். நான்கு மாத கர்ப்பிணியான முகிலா, சில நாட்களுக்கு முன் கணவருடன் கோபித்து, தந்தை வீட்டுக்கு வந்தார். முகிலாவின் சித்தப்பா ஆக்னஸ் செல்வன், நேற்று முன்தினம் இரவு, மாரிசெல்வத்தை அழைத்து சமாதானம் பேசினார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில் ஆத்திரமடைந்த மாரிசெல்வம், மரிய ஆக்னஸ் செல்வனை கல்லால் தாக்கிவிட்டு, தப்பினார். மரிய ஆக்னஸ் செல்வன் உயிரிழந்தார். அவரது உடலை மீட்ட ஓட்டப்பிடாரம் போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக துாத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாரிசெல்வத்தை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை