மேலும் செய்திகள்
பைக் மீது கார் மோதல் வியாபாரி மனைவியுடன் பலி
04-Dec-2025
பெண் எஸ்.ஐ., கணவர் வெட்டி கொலை
04-Dec-2025
துாத்துக்குடி: துாத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் தாலுகா, கீழஈரால் பகுதியை சேர்ந்தவர் பச்சை பாண்டியன், 56. இவர், நேற்று முன்தினம், தன் மகன் முத்துகுமார், 21, உறவினர் சீனிதம்பி, 49, ஆகியோருடன் பஞ்., அலுவலகம் முன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த கார் அவர்கள் மீது மோதுவது போல சென்றது. சீனிதம்பியும், முத்துகுமாரும் விலகிய நிலையில், பச்சை பாண்டியன் மீது கார் மோதியதில், அவர் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, எட்டையபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த எட்டையபுரம் போலீசார், மதுரை, கே.கே.நகரை சேர்ந்த விக்னேஷ்குமார், 22, கண்ணனேந்தல் நகரை சேர்ந்த சாரதி, 20, ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில், இருவரும் சட்டக்கல்லுாரி மாணவர்கள் என தெரிந்தது. பச்சை பாண்டியனின் உறவினர் சீனிதம்பியின் மகளை, அவரது கணவர் குடும்பத்தினர் துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக ஏற்பட்ட பிரச்னையில், பச்சை பாண்டியன், சீனிதம்பி மகளுக்கு ஆதரவாக பேசி, அவரது கணவர் குடும்பத்தினரை எச்சரித்துள்ளார். அதற்கு பழிவாங்க, கணவர் குடும்பத்தினரின் நெருங்கிய உறவினர்களான மாணவர்கள் இருவரும் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.
04-Dec-2025
04-Dec-2025