மேலும் செய்திகள்
தந்தை கொலைக்கு பழி வாங்கரவுடியை கொன்ற மகன் கைது
16-Jan-2025
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே கீழ பாண்டவர்மங்கலம் பகுதி சந்திரசேகர், 21, கடந்த, 16ம் தேதி வெளியே சென்ற நிலையில், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. அவரது நண்பர்களான சென்னை சட்டக்கல்லுாரி மாணவர் ஆகாஷ், 22, அழகுராஜ், 22, ஆகியோர் அவரை தேடினர்.மேல பாண்டவர்மங்கலம் அம்மன் கோவில் அருகே அவர்கள் சென்றபோது, அங்கு நின்ற அழகுராஜா, 21, மாரியப்பன், 31, பூவரசன், 19, பாலகிருஷ்ணன், 26, ரஞ்சித்குமார், 25, ஆகியோரிடம் சந்திரசேகர் குறித்து விசாரித்துள்ளனர்.இதில், இருதரப்பினரும் மோதிக் கொண்டதில், ஆகாஷ், அழகுராஜா காயமடைந்தனர். ஆகாஷ் அணிந்திருந்த தங்க செயின் அறுந்துள்ளது. ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும் கூறப்படுகிறது. போலீசில் ஆகாஷ் புகார் அளித்தார். கோவில்பட்டி மேற்கு போலீசார் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, ரஞ்சித்குமார், பூவரசன், மாரியப்பன், அழகுராஜா ஆகியோரை கைது செய்தனர். பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.இதற்கிடையே, மேல பாண்டவர்மங்கலம் பகுதியில் நின்று கொண்டிருந்த உலகநாதன் என்பவரிடம் தகராறு செய்த ஆகாஷ், அழகுராஜ் உள்ளிட்ட சிலர், அவருக்கு சொந்தமான, 'டாடா ஏஸ்' வாகனத்தின் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். உலகநாதன் புகாரில் ஆகாஷ், அழகுராஜா உட்பட 15 பேர் மீது கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
16-Jan-2025