உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / எலி மருந்து கலந்த நீரை பருகிய சிறுவன் பலி

எலி மருந்து கலந்த நீரை பருகிய சிறுவன் பலி

துாத்துக்குடி : துாத்துக்குடி மாவட்டம், ராமசாமிபட்டியைச் சேர்ந்த ராஜன் என்பவர் மகன் விக்னேஷ் 13, 8ம் வகுப்பு மாணவர்.அவர்கள் வீட்டில் எலித் தொல்லை இருந்ததால், எலிகளை கொல்ல மருந்து வைத்திருந்தனர். அலமாரியில் இருந்த எலிமருந்து தவறுதலாக அருகில் இருந்த குடிநீரில் கலந்து இருந்தது. இதை அறியாமல், சிறுவன் வீட்டிற்குள் நுழைந்ததும், எலி மருந்து கலந்த நீரை எடுத்து பருகினார். இதனால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு, அங்கேயே இறந்தார். சாத்தான்குளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ