உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தூத்துக்குடி / தருவை கடல்சார் ஆராய்ச்சி மையத்தில் கடற்பாசி, இறால் வளர்ப்பு பயிற்சி

தருவை கடல்சார் ஆராய்ச்சி மையத்தில் கடற்பாசி, இறால் வளர்ப்பு பயிற்சி

தூத்துக்குடி : தருவைகுளத்தில் உள்ள கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தில் கடற்பாசி மற்றும் இறால் வளர்ப்பு சான்றிதழ் குறித்த பயிற்சி நடக்கிறது. இது குறித்து தூத்துக்குடி மீன்வளக்கல்லூரி மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது; தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் அங்கமாக விளங்கும் மீன்வள ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க இயக்ககத்தின் கீழ் தருவைகுளத்தில் இயங்கி வரும் கடல்சார் தொ ழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் கடற்பாசி வளர்ப்பு மற்றும் இறால் வளர்ப்பு குறித்த அடிப்படை தொழில்நுட்ப சான்றிதழ் பயிற்சி நடைபெறவுள்ளது. இப்பயிற்சியில் கட ற்பாசி மற்றும் இறால் வளர் ப்பு குறித்த தொழில்நுட்ப வகுப்புபயிற்சி மற்றும் செயல்விளக்க பயிற்சிகள் ஒரு மாத காலத்திற்கு அளிக்கப்படும். இப்பயிற்சியில் கலந்து கொ ள்ள விருப்பமுள்ள அனைவரும் ஆயிரம் ரூபாய் செலுத்தி பதிவு செய்து கொள்ள வேண்டும். பயிற்சியின் முடிவில் பல்கலைக்கழக சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சியில் கலந்து கொள்ள விரும்புவோர் வரும் 10ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும். இது குறித்து மேலும் விபரம் அறிய தருவைக்குளத்தில் உள்ள கடல்சார் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மைய தலைவரை 0461-2910336 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை